CT

அண்மை பதிவுகள்

மன நிறைவு பற்றிய கதை

tamilkaru kathaigal




ஒரு பெரிய அரசன், யயாதி –ன்னு பேரு! கேள்விப் பட்டிருப்பீங்க!

அவனுக்கு நூறு வயசு ஆச்சு! 

வாழ்க்கையிலே அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுட்டான்.

ஒரு நாள் மரணம் அவனைத் தேடி வந்தது.

“இதோ பாருப்பா உனக்கு நேரம் வந்தது உன்னை அழைச்சிட்டுப் போகத்தான் வந்துருக்கேன் புறப்படு!”-ன்னுது மரணம்.

இவன் பெரிய ராஜா தான் பல போர்களில் வீரமா எதிர்த்து நின்னவன் இப்போ நடுங்க ஆரம்பிச்சான்.

“என்னது...இவ்வளோ சீக்கிரமா வந்துட்ட நான் நூறு வருசம் தானே வாழ்ந்திருக்கேன்..அதுக்குள்ளே வந்துட்டியே!” -ன்னான்

“என்னப்பா இப்படி சொல்றே..உன் பிள்ளைங்க எல்லாம் தாத்தா ஆகிட்டாங்க..இன்னும் உனக்கு என்ன வேண்டியிருக்கு இந்த உலகத்துல?..அப்படின்னுது அந்த மரணம்.

அந்த ராஜாவுக்கு நூறு மனைவிகள் - நூறு பிள்ளைகள். அதனாலே ஒரு யோசனை பண்ணினான்... அப்புறம் சொன்னான்:

“இதோ பார்... நீ வந்துட்ட...வெறுங்கையோட திரும்பி போக மாட்ட-ன்னு எனக்கு தெரியும். என் பிள்ளைங்க நூறு பேர் இருக்காங்க அவங்கள யாரயாச்சு கேட்டு பார்க்கறேன் எனக்கு பதிலா நீங்க யாராவது போகறீங்களா –ன்னு. யாரையாவது ஒருத்தரை சம்மதிச்சு அனுப்பறேன் இன்னும் நூறு வருசம் வாழ விட்டுடேன்!” –அப்படின்னான்.

மரணம் சொல்லிச்சு :” உனக்கு பதிலா ஒருத்தர் என் கூட வந்தா போதும்..

ஆனாலும், எல்லாருக்கும் அப்பா... நீயே இப்படி இருக்க உன் பிள்ளைங்க எப்படி வருவாங்க”-ன்னு கேட்டுச்சு.   

இருந்தாலும் ராஜாவுக்கு நம்பிக்கை இருந்துச்சு பிள்ளைங்க ஒவ்வொருத்தரா கேட்டுப் பார்த்தான் மூத்தப் பிள்ளைங்க யாரும் வரல கடைசி மகன் 16 வயது ஆகுது அவன் சம்மதிச்சான்.”நான் தயார் என்னை அழைச்சுட்டு போ நான் தயார்!”-ன்னான்.

இவனைப் பார்த்ததும் மரணத்துக்கே இரக்கப் பட ஆரம்பிச்சுது. “என்னப்பா உனக்கு முன்னாடி பிறந்த 99 பேர் வாழ ஆசைப்படறாங்க உனக்கு வாழ ஆசை இல்லையா?- நல்லா யோசிச்சு சொல்லு-ன்னு மரணம் கேட்டுச்சு.

“நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன் என் அப்பா 1௦௦ வருசம் வாழ்ந்திருக்கார். அப்படியும் திருப்தியடையலே! என் சகோதரர்கள் எல்லாம் என்னை விட அதிக காலம் இந்த உலகத்துல வாழ்ந்திருக்காங்க அவங்களும் திருப்தியடையலே!..

இதை பார்க்கிறப்போ ஒரு விஷயம் நல்லா புரியுது... நான் 1௦௦ வருசம் வாழ்ந்தா கூட எனக்கும் திருப்தி ஏற்படப் போறதில்லே.. அப்படி இருக்கறப்போ நான் இப்ப போனா என்ன ..இல்ல இன்னும் 90 வருசம் கழிச்சு போனா என்ன!.. பேசாம என்னை அழைச்சிட்டுப் போ!” அப்படின்னான்.

மரணம் அந்தப் பையனை அழைச்சிட்டு போனது....       

அதுக்கப்புறம் 1௦௦ வருசம் கழித்து மீண்டும் ராஜாவா அழைத்தது மரணம். 

இப்பவும் ராஜா அதே நிலையில் தான் இருக்கான் மீண்டும் அவனுக்கு பதிலா பிள்ளைகளை அனுப்பினான் இவ்வாறு ஒன்பது முறை ஆனது.

பத்தாவது முறை மரணம் வந்து நின்றது. அப்போது நீ முதல் முறை வந்தப்போ எப்படி இருந்தேனோ இன்னும் அப்படி திருப்தியடையாதவனாகவே இருக்கிறேன். இருப்பினும் இம்முறை என்னை அழைத்துச் செல் என்றான் ராஜா. 

“நான் இதுல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டேன் ஒரு ஆயிரம் வருசத்துல என்னாலே திருப்தியடைய முடியலேனா பத்தாயிரம் வருசம் ஆனாலும் முடியாது! புறப்படு போகலாம்!”-ன்னான்.

 இதுதான் சார் நம்ம உலக வாழ்க்கை! இதை நாம புரிஞ்சுக்கணும்-ன்னு தான் ஒரு பெரியவர் இந்த கதையை சொல்லியிருக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த காலத்து குடும்பஸ்தர் ஒருத்தர்...

அவரைத் தேடிகிட்டு ஒரு நாள் மரணம் வந்தது.

“நான் தான் மரணம் வந்திருக்கிறேன் உன்னை அழைத்துச் செல்ல“

இவருக்கு கோபம் வந்து பளார்-ன்னு அறைஞ்சிட்டார்.

மரணம் கன்னத்தை தடவிக்கொண்டு ஏன் என்னை அறைஞ்சுட்ட-ன்னுது

“பின்னே என்ன...எவ்வளவு காலமா உனக்காக காத்துகிட்டு இருக்கிறது?

            ஏன் இவ்வளவு லேட்!” அப்படின்னார் அந்த ஆளு!..   😲  


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.



          

             

No comments