CT

நுண்ணறிவு...

tamilkaru kathaigal




ஓர் அரசன் – சேவகன் – இரண்டு பேரும் குதிரையில் வந்துகிட்டிருக்காங்க...

ரொம்ப தூரம் குதிரையில் வந்துட்டாங்க...

அரசனுக்கு தாகம் எடுத்தது...

தண்ணீர் எங்கே கிடைக்கும்-ன்னு பார்த்தாங்க... பக்கத்துல வீடுகள் எதுவும் இல்லே...

“கொஞ்ச தூரம் வேலியிலே வெள்ளரிப்பழம் தெரிஞ்சுது... அதையாவது பறிச்சு சாப்பிடலாம்!”-ன்னா மன்னன்.

“இதோ பறிச்சிகிட்டு வரேன்னு சொன்னான் சேவகன்”

“அது வெள்ளரிப்பழம் இல்லே”-ன்னு ஒரு குரல்.

யார் அது?-ன்னு ரெண்டு பேரும் திரும்பி பார்த்தாங்க...

ஒரு பார்வையில்லா பிச்சைக்காரன் தான் அப்படிக் குரல் கொடுத்தான்.

“அரசன் பார்த்தான் “ இவனுக்கோ பார்வையில்லை அது எப்படி வெள்ளரிப்பழம் இல்லே-ன்னு தெரியும்?..

நீ போய் பறிச்சிட்டு வா அவன் தெரியாம சொல்றா-ன்னா மன்னன்.

சேவகனும் போய் பறிச்சுட்டு வந்து கொடுத்தான் மன்னன்-கிட்ட..வாயிலே வைக்க முடியலே அப்படி ஒரு கசப்பு..! 

அவனுக்கு ஆச்சரியம் .. பிச்சைக்காரனிடம் கேட்டான்: “அது எப்படி வெள்ளரிப்பழம் இல்லே-ன்னு உனக்கு தெரிஞ்சுது?”-ன்னான்   

அவன் சொன்னான்: “ஐயா... இது நாலு பேரு வந்துபோற இடம்..அது வெள்ளரிப்பழமா இருந்திருந்தா எப்படி அதை விட்டு வச்சிருப்பாங்க! அதனாலதான் அது வெள்ளரிப்பழமா இருக்காது-ன்னு நினைச்சேன்!-ன்னு சொன்னான்..

அடுத்த படியா தண்ணீருக்கு என்ன செய்யலாம்-ன்னு யோசித்தான் மன்னன்.

சேவகன் சொன்னான்: அரசே இங்கிருந்து நாலு பக்கம் சாலை போகுது நான் கிழக்கே சென்று பார்க்கிறேன் ஏதாவது நீர் நிலைகள் இருக்கும்...தண்ணீர் எடுத்து வரேன்னு புறப்பட்டான்.

இப்பவும் அந்த பார்வையில்லாத பிச்சைக்காரன் சொன்னான்: “ஐயா... கிழக்கே போனீங்கனா நீர் கிடைக்காது. தெற்கே போற பாதையிலே போனா தண்ணீர் கிடைக்கும்!”-ன்னான்.

அவன் சொன்னது மாதிரியே தெற்கே கொஞ்ச தூரம் போனா..ஒரு பெரிய குளம்!

“இது எப்படி உனக்கு தெரியும் உனக்கு?”-ன்னு கேட்டான் மன்னன்.

“ஐயா எனக்கு பாருங்க உடம்பிலே சட்டை இல்ல.. தெற்கில் இருந்து வரும் காற்று குளிர்ச்சியா இருந்தது...அதனாலே அங்கே தண்ணீர் இருக்கும்-ன்னு நினைச்சேன்!”-ன்னு சொன்னான்.  

அரசன்.. பார்த்தான் இப்படி ஒரு ஆள் அரண்மனையில் எப்போதும் இருந்தா நல்லாருக்கும்-ன்னு நினைச்சான். அப்படியே அவனை தூக்கி குதிரையிலே வச்சு அரண்மணைக்கு தூக்கிட்டு போய்ட்டான்.

தினமும் அவனுக்கு ஒரு பொட்டலம் சாம்பார் சாதம் கொடுக்கச் சொன்னான்.அப்படியே நடந்தது..         

அந்த அரண்மணைக்கு ஒரு நாள் ஒரு வைர வியாபாரி வந்தார். மன்னன் அவன் கொண்டு வந்த வைரத்தை எல்லாம் இவன் கிட்ட கொடுத்து சோதிக்கச் சொன்னான்.இவன் வாங்கி சோதிச்சு பார்த்து அதை ரெண்டு பிரிவா பிரிச்சான்.

இடது பக்கம் இருக்கிறது எல்லாம் வைரம் வடப்பக்கம் இருக்கறது எல்லாம் கண்ணாடிக் கல்... அப்படின்னுட்டான்.

“எப்படி கண்டு பிடிச்சே”-ன்னு கேட்டான் மன்னன்.     

ஒவ்வொரு கல்லையும் எடுத்து கையிலே மூடி வச்சிருந்து பார்த்தேன். நம்ம உடம்பு சூடு கல்லிலே ஏறிச்சினா அது வைரம். ஏறலேனா அது கண்ணாடி அப்படித்தான் கண்டு பிடிச்சேன்-ன்னு சொன்னான்.

அரசனுக்கு ஆச்சர்யம்!

“சரி இன்னையில இருந்து இவனுக்கு தயிர் சாதமும் சேர்த்து கொடுங்க!”-ன்னு உத்தரவு போட்டான்.

ஒரு நாள் அந்த மன்னன்..அவன் கிட்டே கேட்டான் “என்னை எல்லாரும் பிச்சைக்கார ராஜா-ன்னு சொல்லறாங்களே!.. –ன்னான்.

அது உண்மை தான் நீ நிஜமாகவே  அப்படியாதான் இருக்கணும்!-ன்னான் இவன்.

“எப்படி சொல்றே?-ன்னான் மன்னன்.”

“நீ நிஜமாவே பரம்பரை ராஜவம்சமா இருந்திருந்தா நான் வெள்ளரிப்பழம் இல்லேன்னு சொன்னபொழுதே என் திறமையை பாராட்டி உன் கழுத்தில் உள்ள மணிமாலையை கழட்டி பரிசா கொடுத்திருப்ப..

“அதுமட்டுமில்லே சாம்பார் பொட்டலம் தயிர் பொட்டலம்-ன்னு எந்த ராஜாவும் கொடுக்கமாட்டாங்க!“

அதுக்கு அப்புறம் தான் ராஜா உண்மைய சொன்னான்: ஐயா நான் பரம்பரை ராஜா இல்ல. நானும் உன்ன மாதிரி பிச்சைக்காரனாதான் இருந்தேன் இந்த நாட்டு வழக்கப் படி அரண்மனை யானை என் கழுத்துல மாலைய போட்டுது அதனாலே ராஜவாகிட்டேன்! அவ்வளவுதான்!-ன்னான் .

பார்வை இல்லேனாலும் நுண்ணறிவு எந்த அளவுக்கு பார்வையா செயல்படுது-ன்னு இதுலேயிருந்து புரிஞ்சுக்க முடியுது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குடும்பத்துலயும் இந்த நுண்ணறிவு உபயோகப்படும். பெட்டியிலே 10 ரூபாய் பணம் இருந்தது ... திடீர்-ன்னு 5 ரூபாய்  காணாம போயிட்டது..மீதி 5 ரூ மட்டும் இருந்தது!

“நம்ம பையன் தான் எடுத்திருப்பான்!”–ன்னாங்க அம்மா..

நிச்சயமா நம்ம பையன் வேலையா இருக்காது-ன்னார் அப்பா..

“எப்படி சொல்றீங்க?” -ன்னாங்க அம்மா..

“அவனா இருந்தா பெட்டியிலே மிச்சம் வச்சிருக்க மாட்டான்”- அப்படின்னார் அப்பா!.  ;-)


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.


 

No comments