CT

அண்மை பதிவுகள்

தேக அபிமானம் பற்றி...குறுந்தகவல்

tamilkaru kathaigal


அந்த ஆளு என்ன கன்னாபின்னான்னு திட்டிவிட்டான் சார்! அதை நினைச்சு ரொம்ப வருத்தமா இருக்கு சார் –ன்னு சொல்லி வருத்தப்பட்டார் ஒருத்தர்.

“இதுல கவலை படறதுக்கு என்ன இருக்கு-ன்னார் ஒரு பெரியவர்”

என்ன சார் இப்படி சொல்றிங்க ஒருத்தர் நம்மள பார்த்து திட்டினா வருத்தமா இருக்காதா- ன்னார்

“அது எப்படி வருத்தமா இருக்கும்? திட்டறதுங்கறது என்ன? அது வெறும் சப்தம் தானே!” –ன்னார் அந்தப் பெரியவர்.

நம்ம ஆளுக்குத் தலையைப் பிச்சிக்கணும் போல இருந்தது. இருக்காதா பின்னே? நமக்கே அப்படித்தானே தோணுது!

அந்தப் பெரியவர் சொல்றது ரொம்பப் பெரிய விஷயம். அதை நாம புரிந்துகொள்ள முயற்சி பண்ணலாம்னா, நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டிங்குது இருந்தாலும் அந்த பெரியவர் என்ன தான் விளக்கம் கொடுக்கறார் –ன்னு பாப்போமே!

ஒரு ரயில் போயிட்டிருக்கு அதுல ஒரு சாது ஹரித்துவார் போய்க்கிட்டிருகிறார்.

ரயில்லே ஏகப்பட்ட கூட்டம். நம்ம ஊர் ரயில்..! கேட்கவா வேணும் ! டிக்கெட் வாங்கிட்டு பாதிப்பேர்..!

‘அது எதுக்கு அனாவசியமா டிக்கெட்-ங்குற நினைப்பிலே பாதிப்பேர்! 
இந்த கூட்டத்துக்கு மத்தியில சாதுவும் போய்க்கிட்டிருகிறார்.

உட்கார்றதுக்கு இருந்த இடத்துல ஒரு ஆள் படுத்திருந்தான். ஒரு முரட்டு ஆசாமி அவன் கால் பக்கத்துல கொஞ்ச இடம் இருந்துச்சு...
அந்த இடத்துல சாது உட்கார்ந்தார்.

ஆனா அந்த ஆள் இரவு முழுவதும் அவர காலாலே உதைச்சிக்கிட்டிருந்தான்.

அதில் சிறு துக்கம், இருந்தாலும் அதை ஒரு மாதிரியா சகிச்சிக்கிட்டு வந்தார்.

பொழுது விடிஞ்சுது...

அந்த சாது ஹரித்துவார் வந்து சேர்ந்தார் அங்கே  ஒரு ஞானியை சந்திச்சார்.  

இரவு ரயிலே அந்த ஆள் உதச்சதையும் அதனால் சிறு துக்கம் ஏற்ப்பட்டதையும் சொன்னார் .சொல்லிட்டு ..

“ஏன் சுவாமி ? எனக்கு துக்கம் ஏற்ப்பட்டதே அது தவறா?-ன்னு கேட்டார்..

“தவறுதான்” –ன்னார் அந்த ஞானி...

“உனக்கு இன்னமும் தேக அபிமானம் போகலைங்கறது இது காட்டுது.

அஷ்டாவக்கிரர் என்ன சொல்றார் தெரியுமா ?

உண்மையான ஞானி, யாரவது தன்னை வந்தனை செய்தால் சந்தோசப்படமட்டார். யாரவது தன்னை நிந்தனை செய்தால் அதற்காக வருத்தப்படமட்டார்.  

மனு என்ன சொல்றார் தெரியுமா ?

ஒரு சாதகன் பாராட்டுதலை விஷம் –ன்னு நினைச்சு பயப்படனும்; அவமானத்தை அமிர்தம்-ன்னு நினைச்சு சந்தோசப்படுனும்-ங்கறார்.

அவமானப்பட்டா, கவலைப்படாமே எப்படி இருக்க முடியும்?-ன்னு நமக்குத் தோணுது.

அதனாலேதான் நம்மள்லே யாரையும் இதுக்கு உதாரணம் காட்ட முடியலே!     

புத்தரையும் கபீரையும் உதாரணமாக காட்டறாங்க. அவங்களுக்கெல்லாம் அவமானம் ஏற்பட்டப்போ கவலையே படலையாம்.

புத்தரை அவமானப் படுத்த கௌசாம்பி ராணி, ஓர் இளம்பெண்ணை கொலை பண்ணி சடலத்தை புத்தர் குடிசைக்கு முன்னாலே போடச் சொன்னார். போட்டாங்க...

புத்தர் தான் அந்த பெண்ணை கெடுத்து கொலை பண்ணிட்டார்ன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா புத்தர் அதை பத்தி கவலைப் படவே இல்லையாம்.அப்புறம் உண்மை தெரிஞ்சதும் புத்தர் புகழ் இன்னும் அதிகமாச்சு...

ஒரு பெரிய சபையிலே ஒரு பொண்ணு நுழைஞ்சு தனக்கும் கபீருக்கும் தொடர்பு இருக்கு-ன்னு சொன்னாள்! கபீர் கவலைப்படலை!

அவங்க மாதிரியெல்லாம் நாம இருக்க கத்துக்கணும், இது போல நிந்தனை எல்லாம் ஆண்டவன் கொடுக்கற பிரசாதம்-ன்னு நினைக்கணும்”-ன்னு சொல்றாரு ஞானி...
------------------------------------------------------------------------------------------------------------------------------
இதைக் கேட்ட இந்த காலத்து ஆசாமி ஒருத்தர், நான் கூட அப்படித்தான் சார்,
          யாராவது அவமானப்படுத்தினா நான் கவலைப்படமாட்டேன்.
நேத்துக் கூட ஒருத்தர் பளார்-ன்னு என்னை அறைஞ்சுட்டார். நான் கொஞ்சம் கூட கவலைப்படலே!.. பேசாமே வந்துட்டேன்!-ன்னார்       
“ஏன் அப்படி வந்துட்டீங்க?”- ன்னு கேட்டேன்!
அவர் அறைஞ்சதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு! அதனாலே அப்படி வந்துட்டேன்! –ன்னார்
“ஏன் அறைஞ்சார்?” –ன்னு கேட்டேன்!
“10 வருசத்துக்கு முன்னாடி ஒரு 15 ரூபாய் அவருக்கிட்ட கடன் வாங்கிருந்தேன் அதை கேட்டுப் பார்த்துட்டு... கடைசியா அறைஞ்சுட்டு போனாரு..”

😂ஆண்டவணுடைய பிரசாதம் அடிக்கடி கிடைக்கும் போலேயிருக்கு!...


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.



No comments