CT

அண்மை பதிவுகள்

குருவும் _சீடர்கள் குழுவும்...


tamilkaru kathaigal



குரு....

இளம் சீடர்கள் எதிர்லே உட்காந்துருக்காங்க.

குரு, பாடம் நடத்திகிட்டிருக்கார்.

சீடர்களுக்கு ஒரு ஆசை.

அதாவது ஒரு முக்கியமான மந்திரத்தை நம்ம குரு கிட்ட இருந்து கத்துக்கணும்ன்னு அவங்க ஆசை.

அது என்ன மந்திரம் – ன்னா இறந்தவர்களைப் உயிர்ப்பிக்கும் புனித மந்திரம்.

“குருவே! தயவுபண்ணி அந்த மந்திரத்தை எங்களுக்கு உபதேசிக்கணும்!” –ன்னு கேட்டாங்க.

“அது ரொம்ப ஆபத்தானது!... அது என்னத்துக்கு உங்களுக்கு?... வேண்டாமே!” -ன்னார் குரு!.

“எங்க நம்பிக்கை உறுதிபடத்தான் கேக்கிறோம் !... வேறொன்னுமில்லே!” - ன்னாக சீடர்கள்.

“பக்குவப்படாத அறிவு ஆபத்தானது” –ன்னார் குரு.

இது சீடர்களுக்கு புரியல!...
குரு அதற்கு விளக்கம் கொடுத்தார்.

அந்த மந்திரத்தை “எப்போ பயன்படுத்தனுங்கறதை அறியக்கூடிய ஞானம் ஏற்படுறவரைக்கும் அதை தெரிஞ்சிக்காம இருக்கிறதுதான் நல்லது...
இல்லனா ஆபத்து!”- ன்னார்.

ஆனா அந்த சீடர்கள் கேக்கிற மாதிரி தெரில..!, ரொம்ப பிடிவாதம் பிடிச்சாங்க...!

“சரி... வாங்க சொல்றேன்னு சொன்னாரு குரு”. 

எல்லாரும் வந்தாங்க.

அந்தப் புனித மந்திரத்தை எல்லாருக்கும் ரகசியமா உபதேசம் பண்ணிவிட்டு எச்சரிக்கையும் கொடுத்தார்.

“இந்த மந்திரத்தை ஆராய்ந்து பார்த்துதான் உபயோகிக்கணும்...அவசரப்பட்டு உச்சரித்து விடக்கூடாது...!” –ன்னார் குரு.

சரின்னு சொல்லிட்டு சீடர்கள் எழுந்து சென்றனர்.

ஒருநாள் அந்த சீடர்கள் எல்லாம் மணற்பாங்கான இடத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க... அப்போ அங்க ஒரு இடத்துல எலும்பு குவியலா  இருந்தது...

முன்னபின்ன யோசிக்காம மந்திரத்தை அங்கு சோதிக்க அந்த எலும்புகள் எல்லாம் ஓநாய்களா மாறி அவங்கள துரத்த ஆரம்பிச்சுது...

‘அப்பதான் சீடர்களுக்கு... குரு சொன்ன அறிவுரையின் அர்த்தம் புரிஞ்சுது’.
“பக்குவப்படாத அறிவு ஆபத்தானது” –ன்னு.

அதனால நாம... நம்ம அறிவ வளர்த்துகிட்டா மட்டும் போதாது அந்த அறிவை எங்க எப்படி பயன்படுத்தனுங்கற பக்குவமும் நமக்கு வரணும். அப்பதான் வாழ்க்கை நல்லபடியா அமையும்.


---------------------------------------------------------------------------------------
இந்த காலத்துல சில சின்ன பிள்ளைங்களுக்கே அறிவு ரொம்ப பக்குவப்பட்டிருப்பதை உணர முடியுது.
ஒரு சீன்ன பையன் பள்ளிகூடத்துல மார்க் லிஸ்ட் கொடுத்தாங்க அதை எடுத்துகிட்டு வீட்டுக்கு வேகமா ஓடுனான்.
எதிர்லே வந்த ஒருத்தர் கேட்டார்.ஏன் இவ்ளோ அவசரமா ஓடறே- ன்னார்?...“எங்க அம்மா கிட்ட அடிவாங்கனும்..அதான் ஓடறேன்னு”...சொன்னான்.
அடி வாங்கறதுக்கா இவ்வளவு அவசரம்?- ன்னு கேட்டார்.“அப்படி இல்லைங்க நா போறதுக்குள்ள அப்பா வீடுக்கு வந்துட்டார்ன்னா...அவர் கிட்ட அடி வாங்க வேண்டியிருக்கும் அதை அவாய்ட் பண்றதுக்கு தான் இப்படி ஓடுறேன்-னான் அந்த பையன்... ;-)


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.



1 comment: