CT

அண்மை பதிவுகள்

உரையாடலில்_ குறுந்தகவல்...


tamil short stories



ஒருத்தர் ஒரு தவறு செஞ்சறாருனு வச்சிகோங்க...

உடனே நீ செஞ்சது தவறுன்னு சொல்றது ஒரு வகை அதுக்கு பதிலா எது சரின்னு புரிய வைக்கிறது இன்னொரு வகை.
இந்த 2வது வகை இருக்கு பாருங்க அது நிர்வாக இயல்லே ரொம்ப முக்கியம்.

அலுவகத்துல வேலை பார்க்கறவங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன தெரியுமா?
சக ஊழியர் கிட்ட எப்படி பழகணும்?, மேலதிகாரிகிட்ட எப்படி பழகணும்?, நமக்கு கீழ வேலை பார்க்கறவங்க கிட்ட எப்படி பழகணும்?, வாடிக்கையாளர் கிட்ட எப்படி பழகணும்?  
இவர்களிடையே செம்மையான உறவை ஏற்படுத்திக்கிறது எப்படி என்ற பாடம் தான் (Inter Personal Skills) திறமையான உறவு என்பது.

எந்த வேலைல இருந்தாலும் சரி... இந்த “ உறவுகளை மேம்படுத்தும் திறன் “ உள்ளவங்க சீக்கிரம் முன்னுக்கு வந்துருவாங்க...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல ஒரு கணக்கெடுப்பு பண்ணி பாத்தாங்களாம் “பார்க்கிற வேலையில எது மாதிரி குணாதிசியம் உள்ளவங்க வேகமா முன்னுக்கு வர்றாங்க“ –ன்னு தெரிஞ்சுக்க இந்த கணக்கெடுப்பு.

ஒருத்தர் ஒரு வேலையில இருந்தா... அது சம்பந்தப்பட்ட (subject) அறிவு 35% சதவீதம் இருந்த போதுமாம்.

ஆனா ‘உறவுகளை மேம்படுத்தும் திறன்’ (Inter Personal Skills) 65% சதவீதம் வேணுமாம். இப்படி இருக்கறவங்க சீக்கிரம் முன்னுக்கு வந்துடறாங்கலாம்.    

அதனால அடுத்தவங்க கிட்ட எப்படி பழகுறதுன்னு தெரிஞ்சுக்காதவன் வாழ்க்கையில முன்னேற முடியாதுன்னு சொல்லறாங்கப்பா.

பெரியவங்க (தலாய்லாமா) என்ன சொல்றாங்க தெரியுமா ?
“நீங்க இந்த பூமியில பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டும் என்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்க. முடியாவிட்டால் பரவாயில்லை யாரையும் புண்படுத்தி விடாதீர்கள் ! ” அப்படின்னு சொல்லறாங்க.


---------------------------------------------------------------------------------
எனக்கு தெரிந்தவர் ஒரு அலுவலகத்துல வேலை பார்க்கிறார். அவர் சொல்லுவார்...
“எனக்கு இந்த Inter Personal Skills ரொம்ப அதிகம் சார்... சக ஊழியர்கிட்ட சுமூகமா நடந்துக்குவேன்.
என்கூட வேலை பார்க்குறவங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா... அந்த சமயத்துல அவர் செய்ய வேண்டிய வேலைய நான் செஞ்சுருவேன் சார்!” – அப்படிம்பார்.
நான் அவர்கிட்ட.... “சமீபத்துல அப்படி ஏதாவது செஞ்சிருக்கீங்களா?” –ன்னு கேட்டேன்.
“செஞ்சிருக்கேன் சார் ! போன வாரம் புதன்கிழமை ஆபீஸ்ல பக்கத்துக்கு சீட் காரருக்கு வயித்து வலி... உடனே நான் மெடிக்கல் லீவ் போட்டுட்டு எங்க வீட்டுக்கு போய்ட்டேன் சார்!”  அப்படின்னார் ... :( J


No comments