CT

அண்மை பதிவுகள்

புகை ❎ பழக்கம்...


tamilkaru kathaigal



ஒருத்தர் சிகரெட்டும் கையுமா வந்தார்...

“சார் இந்த புகைப் பிடிக்கிற பழக்கத்தை நிறுத்திடணும்-ன்னு பார்க்கறேன்! ஆனா முடியலே!” –ன்னார் .
புகைப் பிடிக்கிறத நிறுத்தறது ரொம்ப சுலபம்-ன்னார் இன்னொருத்தர்.
“எப்படி சொல்றீங்க?”- ன்னு கேட்டார் அவர்.   
“நான் கூட ஏற்கனவே பத்து தடவ நிருத்திருகேன்-ன்னு சொன்னார் அவர்“
இதுல இருந்து என்ன தெரியுது சுலபமா புகைப் பழக்கத்தை கைவிடறது கஷ்டம்தான்னு தெரியுது...
இருந்தாலும் ஆராய்ச்சி – அனுபவம் இது இரண்டையும் அடிப்படையாக கொண்டு  சில வழிமுறைகளைச் சொல்றாங்க.

முதல் கருத்து:
கொஞ்ச நாளைக்கு புகைப்பிடிக்கிற நபர்களிடமிருந்து விலகியிருக்கணும்.

இரண்டாவது கருத்து:
புகைப்பிடிக்கிறத எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டும். அது உங்க உள்ளுணர்வைத் தூண்டும், பிறருக்கும் பயன்படும்.

மூன்றாவது கருத்து:
தினமும் இரண்டு தடவ குளிக்கணும் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் அப்புறம் குளிர்ந்த நீரில..

நான்காவது கருத்து:
உடற்பயிற்சிகள் செய்யணும் தினமும்.
மூச்சுப்பயிற்சி மிகவும் நல்லது .

ஐந்தாவது கருத்து:
சாப்பாடு மிதமா இருக்கணும் .சீரா இருக்கணும் ,பச்சைக் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்       

ஆறாவது கருத்து:
ரொம்ப நேரம் பசியோட இருக்ககூடாது. புகைப்பிடிக்கிற பழக்கத்தை நிறுத்த முயற்சி பண்ணும்போது உடல் எடைக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

ஏழாவது கருத்து:
காப்பி, தேநீர், மதுபானம் இதெல்லாம் வேண்டாம். உப்பினை அளவாக சேர்த்திக்கொள்ளவும்.

எட்டாவது கருத்து:
அதிக நீர் பருக வேண்டும்,குறைந்தது பத்து குவளை தண்ணீராவது பருக வேண்டும். இது புகைப்பிடிக்கிற ஆவலைத் தணிக்கும்.

ஒன்பதாவது கருத்து:
இறை நம்பிக்கை உள்ளவங்க... புகைப்பிடிக்கிற எண்ணம் வரும்போது பிராத்தனையில் ஈடுபடலாம்.

பத்தாவது கருத்து:
உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்ககிட்ட நீங்க புகைப்பழக்கத்தை நிறுத்திட்டதா சொல்லிடுங்க..அந்த வார்த்தைக்காகவும் மாறலாம்-ன்னு அனுபவப்பட்டவங்க சொல்றாங்க.
முயற்சி பண்ணிதான் பார்க்கலாமே...
--------------------------------------------------------------------------------------------
ஒரு முக்கியமான இடத்துல நின்னுட்டு இருந்தார் ஒருத்தர், அங்கே வந்த இன்னொருத்தர் “ஏன் சார் இங்க சிகரெட் பிடிக்கலாமா?” –ன்னு அனுமதி கேட்டார்.“இந்த இடத்துல சிகரெட் பிடிக்க கூடாது!” –ன்னார்.

இவர்: “நீங்க இப்படி சொல்றீங்க ஆனா இங்க இவ்ளோ சிகரெட் துண்டுகள் கிடக்குது, அவங்கள்லாம் யாரு?- ன்னார் அவர்.“அவங்கள்லாம் உங்கள மாதிரி என்கிட்டே அனுமதி கேட்காதவங்க!” அப்படின்னார் இவர். 😐😐


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.




No comments