CT

அண்மை பதிவுகள்

சிந்தனையாளர் வரிகள் - தொகுப்பு 1

tamilkaru quotes


நாம் இன்று இப்படி இருப்பதற்கு  நாமே பொறுப்பு.
இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை மாற்றிக்கொள்வதற்கான ஆற்றல் நம்மிடமே உள்ளது 
- சுவாமி விவேகானந்தா 

நீங்கள் ஒரு வேலையை முடித்துக் காட்டாதவரை,
அது உங்களால் முடியும் என யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

-கிறிஸ்டோபர் நோலன் 

நீங்கள் தாமதிக்கலாம். ஆனால்நேரம் தாமதிக்காது.
நேரத்தின் வேகத்திற்கேற்ப நீங்களும் நகர்ந்து செல்வதே சிறப்பானது.

-பெஞ்சமின் பிராங்க்ளின் 

முயற்சி செய்து எதுவும் கிடைக்காமல் இருப்பவனிற்கும்
எந்த முயற்சியும் செய்யாதவனிற்கும் இடையில் மிகப்பெரும்
வித்தியாசம் உள்ளது.

-ஜாக்கி சான்

மிகப்பெரிய திட்டங்களை விட ஒரு சிறிய செயல் சிறந்தது. 
வெறும் திட்டங்களால் எந்தப் பயனும் இல்லை 
அவற்றை செயல்படுத்துவதே முக்கியமானது.

ஜான் பர்ரோஸ்

உங்களது தனித்துவத்தை உணரவிரும்பினால்,
மற்றவர்களின் விருப்பப்படி வாழ்வதை நிறுத்துங்கள்.

ப்ரூஸ் லீ 

என் வாழ்வின் மிக கடினமான காலங்களே 
மிகச் சிறந்தவையாக எனக்குத் தெரிகின்றது. ஏனெனில் அங்கே தான் என் உண்மையான பலத்தினை அறிந்துகொண்டேன்.

- ராபர்ட் டவுனி . ஜேஆர் 

நான் என்பது மறைந்தால்,
அந்தக் கணமே அன்பு மேலோங்கிவிடும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

சுதந்திரமான மனதில்தான்  
பெரிய அளவில் 
ஆற்றல் வெளியாகும்.

- ஜே.கிருஷ்ணமூர்த்தி  

தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில்
உங்களை முழுமையாக தோற்கடிக்கும் ஒரே விடயம்
"எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது தான்”.

- மார்க் ஜுக்கர்பெர்க்

thagore quotes

உங்கள் வாழ்வில் சூரியன் மறைந்துவிட்டதை எண்ணி 
அழுதுகொண்டிருந்தால், அதன் பின்னர் தோன்றும் 
நட்சத்திரங்களை உங்கள் கண்ணீர் மறைத்துவிடும்.

 - ரவீந்தரநாத் தாகூர்

அமைதியான மனிதனின் உள்ளேயே ஆர்ப்பாட்டமான 
அறிவிருக்கும்.
யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து
கணித்துவிடாதீர்கள்.

- ஸ்டீபன் ஹாவ்கிங்

"மகிழ்ச்சியான வாழ்விற்கு  
மிகச்சிறந்த அறிவுரையை  
என்னிடம் கேட்டால்,  உங்கள்  
 மனதிற்குப்  பிடித்த வேலையைச் 
செய்யுங்கள் எனக்கூறுவேன் " 

ரிச்சர்ட் பிரான்சன்

எதைச் செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதே 
வெற்றிக்கான முதல் யுக்தி 

மைக்கேல் போர்ட்டர்

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே
 உள்ள வேறுபாடு முயற்சி 

அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் 

இலகுவான வாழ்க்கையைத் தேடி ஓடுவதை விட
கஷ்டங்களைத் தாங்குவதற்குப் பயிற்சி செய்வது 
புத்திசாலித்தனமானது.

ப்ரூஸ் லீ 

வெற்றி உங்களை நோக்கி வருவது இல்லை.
நீங்கள் செல்லுங்கள்.

- மார்வா கோலின்ஸ் 


எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது 
வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்கு தெரிவதில்லை. 
எனவே தோல்வியை தழுவுகின்றன. 
- தாமஸ் ஆல்வா எடிசன்


No comments