ஆசை * ஆசை = பேராசை ...
அதுபோல போட போட நிரம்பாத பத்திரம் ஒண்ணு இருக்கு
என்ன தெரியுமா?
நம்மள்லே, பலபேர்கிட்ட அது இருக்கு... அதுதான்
“பேராசை”...
பேராசையைப் பற்றி ஒரு பெரியவர் (சுவாமி
சுகபோதானந்தா)கதை ஒண்ணு எடுத்துரைக்கிறார்.
ஒரு மன்னர் நகர்வலம் போய்க்கொண்டிருந்தார்.
ஒரு பிச்சைக்காரன் எதிர்ல வந்து “பிச்சை
கொடுங்க!” - ன்னு கேட்டார்.
என்னுடைய அமைதியை கெடுக்காதே போ என்றார்
மன்னர்...
அவன் சிரிச்சான்..!
அரசே உங்க “அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால்
அது அமைதியே இல்லை!” – ன்னான்.
எதிர்ல நிக்கிறது வெறும் பிச்சைக்காரன் இல்ல,
ஒரு யோகி-ன்னு புரிஞ்சிக்கிட்டார் அரசர்.
“துறவியே உங்களுக்கு என்ன வேண்டும்னாலும்
கேளுங்க நான் கொடுக்கிறேன்!” –ன்னார்.
மறுபடியும் அந்த துறவி சிரிக்கிறார்.
“அரசே உங்களால முடியாததெல்லாம் கொடுக்க
முடியும்-ன்னு சத்தியம் செய்யாதீங்க!” –ன்னார்.
இவர் என்ன இப்படி சொல்றார்-ன்னு நகர்வலத்தை
பாதியில் நிறுத்தி விட்டு வாங்க அரண்மனைக்கு போகலாம்ன்னு துறவிய அழைச்சிட்டு
வந்தார்.
“துறவி தன்னிடம் உள்ள பிச்சைப் பாத்திரத்தை
நீட்டினார் , எனக்கு இது நிறைய பொற்காசுகள் வேண்டும்”-ன்னார்.
இவ்வளவுதான என்று கூறிவிட்டு ஒரு பெரிய
தாம்பாளம் நிறைய பொற்காசுகள் வரச்செய்து பிச்சை பாத்திரத்தில் போடச் செய்தார்.
பொற்காசுகள் போட போட உள்வாங்கிக் கொண்டே
இருந்தது. அரசாங்க கஜானாவே காலியானது. மன்னர் பொத்தென்று துறவியின் காலில்
விழுந்தார், என்னால் இதை நிரப்ப இயலவில்லை என்று.
அப்போ அந்த துறவி சொன்னாராம், மன்னா !, இந்த
பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல வேறு எவராலும் நிரப்ப முடியாது ஏனென்றால் இது
பேராசையால் இறந்து போனவனின் மண்டை ஓடு என்று.
செத்த பின்னும் நிறைவில்லை-ன்னா. அது
எப்பேற்பட்ட பேராசையா இருக்கும்- ன்னு யோசிச்சுப் பாத்துக்கோங்க......👀
---------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ஆளு ஒருத்தர் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தார்.
அழகு-அறிவு-படிப்பு எதுவும் இல்லைன்னா பரவால, பணம் மட்டும் இருக்கற மாதிரி பொண்ணா பார்க்கணும் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.
ரொம்ப நாளைக்கப்பறோம் ஒரு பணக்காரர் கிடைச்சார் அவர் சொன்னார்..
“இதோ பாருங்க...எனக்கு 20 வயசுல ஒரு பொண்ணு இருக்கு அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா 2 லட்சம் பணம் கொடுப்பேன்”.
25 வயசுல ஒரு பொண்ணு இருக்கு அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா 2 1/2 லட்சம் பணம் கொடுப்பேன்”.
30 வயசுல ஒரு பொண்ணு இருக்கு அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா 3 லட்சம் பணம் கொடுப்பேன்”.
இவன் கொஞ்ச நேரம் யோசிச்சான் அப்றோம்... ”ஏன் சார் உங்க கிட்ட 50 வயசுல ஏதாவது பொண்ணு இருக்கா?” –அப்படின்னான்.
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.
No comments