CT

அண்மை பதிவுகள்

சிறைபட்ட பறவையாய்...


நிலவில் கருவாகி
நிலத்திற்கு வந்தவளோ - இல்லை
நீள்வானம் தவறவிட்ட
நெட்டநெடு வெண்ணிலவோ
முற்பிறப்பில் இந்திரனுக்கு
முந்தானை விரித்தவளோ - இல்லை
இப்பிறப்பில் எனக்காகவே
ஏக்கத்தோடு தரித்தவளோ

வானவில்லும் உன்னுடைய
வண்ணத்தைக் கடன்கேட்கும் - நீ
வலம்வரும் நேரத்தை
வண்டுகளோ எதிர்பார்க்கும்

என்னுடைய விழிப்பறையில்
உனதுருவம் சிற்பமாச்சு - அன்பே
என்னுடைய செவிப்பறையில்
உனதுகுரல் கற்பமாச்சு

கரையேற முடியாத
கடலாக கிடந்தயென்னை -ஓர்
ஓடும் நதியாக
ஓடவிட்டவள் நீதானே

சிறைபட்ட பறவையாய்
சிந்தனையற்று கிடந்தயென்னை - ஆழ்
கடல்கடக்கும் பறவையாய்
ஆக்கிவிட்டவள் நீதானே

அல்லிக்குளத்தில் நீராடும்
அந்திமாலை நிலவுநீ - உன்னை
அள்ளியணைக்கப் போராடி
அயர்ந்துவிழுந்த கனவுநான்

முள்ளில் விழுந்த சேலையாய்
உன்னில் விழுந்து தவிக்கிறேன் - நான்
பல்லில்லா குழந்தையாய்
சொல்லிழந்து பதைக்கிறேன்
என்றும் எழுத்தாணி முனையில் ... 

கவிஞர் செந்தமிழ்தாசன்

பரிசு...



பலர் என்னை
தாடியெடு தாடியெடு
என்கிறார்கள் ...

எப்படிநான்
அதைத் தொலைப்பேன் ...



அவள்கொடுத்த அன்புபரிசு

அதுமட்டும் தானே ! 

No comments