தூண்டல்...
எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்காதிரு
எப்போதும் இகழ்ச்சிக்கு கலங்கதிரு...
காலம் தந்த வேலை என்று கடமை செய்
காலம் என்றும் முடியக்கூடும் விரைந்து செய்...
உன் கணக்கு முடிந்து விட்டால் ஓய்வு தான்
உயிர் இருக்கும் நேரம் எதுக்கு ஓய்வு தான்...
கொண்டு போக இவ்வுலகில் ஏதுமில்லை தான்
தந்து போனால் கொண்டு போவாய் நல்ல பேருதான்..!
என்றும் எழுத்தாணி முனையில்...
-கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments