CT

அண்மை பதிவுகள்

குறுந்தகவல்...திருக்குறளே...

நம் மொழியின் தொடக்கமும் முடிவும் திருக்குறளே...

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே யுலகு...." 

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய, 

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம், 
கூடி முயங்கப்பெறின்" 

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். 

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை 
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் 
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

 

திருக்குறளில்தமிழ்என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதைகுன்றிமணி.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்பனைமூங்கில்

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம்குவளை.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

-குறுந்தகவல்

No comments