சந்தங்கள் ...
கவியின் சொந்தங்கள்
சதிராடும் என்நெஞ்சில்
சாகாத பந்தங்கள்
வெந்தாலும் வேகாது - என்
செந்தமிழோ சாகாது
தடுத்தாலும் நிற்காது - தின்னக்
கொடுத்தாலும் விக்காது
என் தமிழன்னை புகழ்போல - வேறு
எம்மொழியும் எட்டாது ...
அனைவருக்கும்
உலகமொழிக்கெல்லாம் தாய்மொழியான
நம் தமிழ் மொழி தின நல்வாழ்த்துக்கள்
முறுக்கு மீசைக்குள்
முறுக்கி வைத்திருக்கிறேன்
கர்வத்தை ...
பிறப்பால் தமிழன் என்பதால்
உயர்த்தி வைத்திருக்கிறேன்
புருவத்தை 💪 ...
என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்
தாய்மொழி...
Reviewed by
தமிழ்கரு
on
February 21, 2018
Rating:
5
No comments