ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்...
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றியும், முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள் தான் 'ஏப்ரல் முதல் நாள்'. ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்...இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை
உறுதியான காரணம்
கனடா, நியூசிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் இந்த தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை காரணங்களும் பல கூறப்படுகின்றன. உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை.
முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம்
சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் பிரான்சில் ஏப்ரல் ஃபூல் தினம்
பிரான்சில் முதன் முதலில் இத்தினம் கொண்டாடப்பட்டது. 16ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப். 1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. அப்போதைய ஜூலியன் காலண்டரிலும் இவ்வாறு தான் இருந்தது. பின், 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்., 29ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.
இதில் ஜன. 1, புத்தாண்டாக மாற்றப்பட்டது. இதனை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582 அக்., முதல் பயன்படுத்த துவங்கின. 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை, கிண்டல் செய்வதற்காக, 'முட்டாள்கள் தினம்' என அழைத்தனர்.
கட்டுக் கதைகள்
பின் நாளடைவில் அனைத்து நாடுகளும் இத்தினத்தை முட்டாள்கள் தினமாக கொண்டாடின. கட்டுக் கதைகள் கடந்த 1508ம் ஆண்டு முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், 1539ல் டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1466ம் ஆண்டு, பிலிப்பைன்சை சேர்ந்த மன்னனை, அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் ஒரு கருத்து உண்டு.
ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் இன்னும் மறையவில்லை.
- குறுந்தகவல்
தினத்தந்தி
No comments