CT

அண்மை பதிவுகள்

கவி எழுதி...

tamil_lines_images


புருவமென்னும் நங்கூரத்தால் - என்
புலனைந்தை நிறுத்தினாய்
புடம்போட்ட தங்கம்போல் - என்
பூமனதை வருத்தினாய்

சரிந்துவிழும் கார்குழலால் - என்
சகாப்தத்தைப் புரட்டினாய்
சாயம்பூசா உதட்டைக்காட்டியே - என்னுள்
சக்கரைநோயை புகுட்டினாய்

உன்னுடைய வெட்கத்தை - உன்
உடம்புமுழுவதும் தேடப்போறேன்
பத்துவிரலால் உன்னுடம்பில் - நான்
பம்பரமாய் ஆடப்போறேன்

சேர்த்துவைத்த வெக்கத்தை - அப்படியே
சேர்த்துவிடு என்னிடத்தில்
பார்த்துப்பார்த்து கவியெழுதி - அதை
படித்துக்காட்டுவேன் உன்னிடத்தில்

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments