CT

அண்மை பதிவுகள்

பயணப்படுங்கள்...

tamilkavithai

பறவைகள் அழுவதில்லை
பரவசமாய் பறப்பதினால்
விலங்குகள் புலம்புவதில்லை
விலங்கிடாமல் இருப்பதினால்

நிற்கும் குளம்நீர்
நெருப்பாக கொதிக்கலாம்
ஓடும் நதிநீர்
ஒருபோதும் சுடுவதில்லை

சிறயைவிட கொடியது
அறைக்குள்ளே கிடப்பது
சொர்க்கத்தைவிட இனியது
சுற்றுலாவில் இருப்பது

கண்களுக்கும் பசியெடுக்கும்
காட்சிகளை உணவாக்கு
கல்லீரல் நுரையிரலுக்கு
புதுக்காற்றை விருந்தாக்கு

கண்கள் இன்புற்றால்
இதயமும் இன்புறும்
காட்சிகள் மாறாதிருந்தால்
கண்களும் சோர்வுறும்

இதயம் இன்புற
இடமாற்றம் அவசியம்
பயணத்தில் பதுங்கியிருக்கு
மகிழ்ச்சியின் ரகசியம் :-)

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments