CT

அண்மை பதிவுகள்

பொங்கல்...


tamil poem images
பொங்கல் போல் எங்கள் வாழ்வும் பொங்கட்டும்..
இனியாவது எங்கபோல உழவன் கை ஓங்கட்டும்...

புயல் தாண்டவங்கள் குறையட்டும்..
நாங்கள் தலை நிமிர தானியங்கள் குனியட்டும்...

எறும்புக்கும் கோலம் போட்டு உணவு தந்தோம்..
பலர் இளைப்பார நீரு கேட்டால் மோரு தந்தோம்...

பொழப்பு தேடி வந்தோருக்கு பூமி தந்தோம்..
பல பொழப்பற்ற மனிதருக்கு பொழப்பு தந்தோம்...

வந்தோரை வாழ வைக்கும் எங்கள் பூமி..
குடி தண்ணீருக்கு கையேந்துறத பாரு சாமி...

இந்த நிலை மாறி விட உதவு சாமி..
இது இவ்வாண்டு வேண்டுதலு கேளு சாமி..!

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍

-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments