CT

அண்மை பதிவுகள்

வலி...

poem images in tamil

சிறுகச்சிறுக சேத்துவச்சு
உருகிஉருகி காதலிச்சேன்
உதறியவள் போகையிலே
உயிர்போக பேதலிச்சேன்

அவள்போகும் வழியெல்லாம்
அவளுக்காக காத்திருப்பேன்
உயிர்போகும் வலியஅந்த
ஓவ்வொருநொடியும் நான்சுமப்பேன்

ஒருநாளு பார்த்துப்போனா
ஒருவாரம் புன்னகைப்பேன்
உறக்கத்திலும் அதநினச்சு
உருண்டுபுரண்டு நான்குதிப்பேன்

இதயத்தின் பாரமிறக்க
எந்தக்கருவியும் இல்லையே
இடியவிட கோரமாய்
இதயத்துடியின் தொல்லையே

எமனைக் காதலா
ஏனிறைவா அனுப்பிவச்சே
இமயக் கல்கொண்டு
இதயத்த ஏன்நச்சே :-(

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments