நேர்மை...
நேர்மையால் பலரை நீ
நிரந்தரமாக இழக்கலாம்...
ஒரு போதும் உன்னுடைய
நிம்மதியை இழக்கமாட்டாய்...
பொய்யுரைத்து பலபேரால் நீ
பகட்டு இன்பம் பெற்றிடலாம்...
ஒருபோதும் நிம்மதியை
உன்னால்பெற முடியாது...
நேர்மையய்ப்போல் சிறந்ததோர் கவசமில்லை..!
மனசாட்சியை விட மிகப்பெரிய கடவுளுமில்லை..!
என்றும் எழுத்தாணி முனையில்...?
- கவிஞர் செந்தமிழ்தாசன்
கவிஞன்...
சோல்னாப்பை தூக்கிதிரியும்கவிஞனல்ல நான் - சுக
துக்கங்களைத் தூக்கிதிரியும்
கவிஞனடா நான் ...
கவிஞனென்ற கர்வத்தை
என்எழுத்தில் பதிப்பேன் - என்
கவலைகளை பிறரறியா
ஆடையில் மறைப்பேன் ...
பார்ப்பதற்கு பகடாய்தான்
என்னைத் தெரியும் - இது
பகல்வேடம் என்றெந்தன்
வலிக்கேபுரியும் ...
நான்கடந்த வறுமைகளை
என்காலம் அறியும் - அது
நாளுக்குநாள் வளமைபெறும்
என்கவியில் நிறையும் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
-கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments