CT

அண்மை பதிவுகள்

குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்க வழக்கங்கள் காரணம் தெரியாமல் பின்பற்றப்படுகிறது. ஆனால் அதன் பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர் செய்த வேலைதான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் மொட்டை போடுவது என்பது ஒன்று. பலரும் இது ஒரு நேர்த்திக்கடன், குடும்ப வழக்கம் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இனி இதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

ஒரு குழந்தையாக நாம் பிறக்கும் முன் தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருக்கிறோம். இங்கு நம்மைச் சுற்றி சந்தனமும், பன்னீருமா இருக்கும். இரத்தம்,மலம் சிறுநீர் நிறைந்த சூழலில் நாம் இருப்போம். கடல் நீரில் கை விரல்களை ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுத்த பின் துடைத்து விட்டு வாயில் விட்டால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. அப்படி இருக்கையில் பத்து மாதம் இரத்தம்,மலம் சிறுநீர் நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் எவ்வளவு ஊறியிருக்கும்.

நம் உடலின் கழிவுகள் எளிதில் வெளியேறினாலும், தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு.
ஆதாலால் தான் குழந்தை பிறந்து ஒரு வருட காலத்தில் மொட்டை போடுகின்றனர். ஒரு வேளை மொட்டை போடாவிட்டால் அக்கழிவுகள் தலையிலே தங்கி பிற்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்புகள் உள்ளது. எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் பரப்பப்பட்டது. ஏனென்றால் மக்களிடம் அறிவியல் ரீதியாக சொல்வதை விட ஆன்மீக ரீதியாக சொன்னால் கட்டாயம் செய்வர் என்று நம் முனோர்கள் நன்கு அறிந்துள்ளனர்...

- குறுந்தகவல்

No comments