தாயோடு தேடுவதோடு
முடிந்துவிடாது அன்பு
தங்கையோடு தேடுவதோடு
முடிந்துவிடாது பாசம்
காதலியோடு தேடுவதோடு
முடிந்துவிடாது காதல்
இனப்பெருக்கத்திற்காக மட்டுமே
பயன்படுவதல்ல காமம்
இவை நான்கும் உயிர்வாழ
அத்தியாவசியம் இல்லாமல் போகலாம்
ஆனால்
உணர்ச்சியோடு வாழ மிகவும் அத்தியாவசியம்
அத்தகைய உணர்வும் உணர்ச்சியும்
காயப்பட்டாமல் சந்தோசமாக வாழ
மதிப்பற்ற இடத்தில் அதற்காக கையேந்தி நிற்காதே .
கையேந்தி நிற்போறை
அலட்சியப்படுத்தி காயப்படுத்தியும் விடாதே ...
அன்பு பாசம் காதல் காமத்தோடு நான்.
என்றும் எழுத்தாணி முனையில் ...
-கவிஞர் செந்தமிழ்தாசன்
அன்பு...
Reviewed by
தமிழ்கரு
on
December 27, 2017
Rating:
5
No comments