CT

அண்மை பதிவுகள்

அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்?

அரைஞாண் நம் சிறு வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கறுப்பு கயிறு.
எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..
உண்மையிலேயே எதற்கு கட்றோம்னு தெரியுமா, நம் முன்னோர்கள் கண்டறிந்த மருத்துவ ரகசியமே அதில் அடங்கியுள்ளது..

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாத ஒன்றாகும்.
ஆண்களுக்கு பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுகிற பழக்கம் முன்பெல்லாம் இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவது குறைந்துவிட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய் ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக்குறிப்புகள் சொல்கின்றன இதைத் தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். இப்போது நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக்கொடி கட்ட தான் செய்கிறார்கள். நம் முன்னோர் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

- குறுந்தகவல்

No comments