CT

அண்மை பதிவுகள்

நோய் இல்லா வாழ்வின் ரகசியம் – இயற்கை விதிகள் விளக்கம்

பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்ற உடலின் இயற்கையான தேவைகளை நாம் சரியாகப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்வதோடு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை பழக்கிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய இயற்கை விதிகள் பின்வருமாறு:
உணவு அருந்தும் முறை:
நேரம் பார்த்தோ அல்லது ருசி பார்த்தோ சாப்பிடுவது மிகவும் தவறாகும். 

பசி உணர்வு தோன்றும் போது மட்டுமே சாப்பிட வேண்டும், பசிக்காத போது சாப்பிடக்கூடாது. 

பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும், அளவுக்கு அதிகமான சுவையுடன் உணவை உட்கொள்வதும் இயற்கைக்கு முரணானதாகும்.

உணவை அவசரம் காட்டாமல், பொறுமையாக நன்றாக மென்று விழுங்க வேண்டும். 

சாப்பிடும்போது தண்ணீர் அருந்தக்கூடாது, முப்பது நிமிடம் கழித்தே நீர் அருந்த வேண்டும். 

இரவு நேர உணவை 7 முதல் 8 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். 

காலை 9 மணி முதல் 11 மணி வரை பெரும்பாலும் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீர் அருந்தும் முறை:

தாகம் இருக்கும் போது மட்டுமே நீர் அருந்த வேண்டும். 

தாகம் அற்ற நிலையில் நீர் அருந்துவதோ அல்லது தாகம் இருக்கும்போது நீர் அருந்தாமல் இருப்பதோ உடலின் இயற்கை விதிகளை மீறுவதாகும்.

தூக்கம் மற்றும் ஓய்வு:

இரவு நேரம் ஓய்வுக்காகவே என்பதால், 
இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை உறங்குவது மிக மிக அவசியமாகும். 

தூக்கம் வரும்போது விழித்திருப்பதும், ஓய்வு தேவைப்படும்போது உழைப்பதும் நோய்களை உருவாக்கும் இயற்கை விதிமீறலாகும்.

கழிவுகளை வெளியேற்றுதல்

உணவு மற்றும் ஓய்வு எப்படி மனித வாழ்க்கைக்கு அவசியமோ, அதேபோன்று 

சிறுநீர், மலம், வியர்வை போன்ற கழிவுகள் உடலில் இருந்து முறையாக வெளியேறுவதும் மிக மிக அவசியமாகும். 

அதிகாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மலம் மற்றும் நீர் போன்ற உடல் கழிவுகள் வெளியேறுவது ஆரோக்கியமான உடலைக் குறிக்கும்.

மனநலம் மற்றும் உழைப்பு:

அதிகமான உடல் உழைப்பு, அலைச்சல் மற்றும் மன உளைச்சல் உடலைச் சீர்கெடுக்கும் என்பதால், உடல் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படும் வகையில் நமது உழைப்பின் எல்லையை அமைத்துக்கொள்ள வேண்டும். 
மனதில் உருவாகும் குணக்கேடான எண்ணங்களை அடையாளங்கண்டு அவற்றை நீக்க வேண்டும். 

புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் மதுபான வகைகளை பயன்படுத்துவது போன்ற மனிதர்களின் இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

No comments