கவிதை வரிகள் || கவிஞர் செந்தமிழ்தாசன்
நினைவு...
மூளைக்குள் அவள் நினைவோ
முண்டிக்கிடக்க..!
முண்டிக்கிடக்க..!
என்வீட்டுக் கடிகாரமோ
நொண்டிக்கிடக்க..!
நொண்டிக்கிடக்க..!
எப்படித்தான் இரவுகளைக்
கடப்பேனோ- இல்லை
கடப்பேனோ- இல்லை
ஏங்கியே அடுப்பாய்த்தான்
கிடப்பேனோ..!
கிடப்பேனோ..!
காலம்...
காலமென்னைப் புதைக்கப்பார்க்கிறது - பெரும்
கவலையென்னை சிதைக்கப்பார்க்கிறது - இருந்தும்
எழுந்து நடக்கப்பார்க்கிறேன் - அந்த
இமயம் ஏறி கடக்கப்பார்க்கிறேன்...
புதைக்கப்புதைக்க முளைத்து எழுவேன் - இந்த
பூமிப்பந்தை கிழித்தெரிவேன்...
காலமே காலமே புரிந்துகொள்வாய் - நான்
காலனுக்கு காலன் என அறிந்துகொள்வாய்.
கவலையென்னை சிதைக்கப்பார்க்கிறது - இருந்தும்
எழுந்து நடக்கப்பார்க்கிறேன் - அந்த
இமயம் ஏறி கடக்கப்பார்க்கிறேன்...
புதைக்கப்புதைக்க முளைத்து எழுவேன் - இந்த
பூமிப்பந்தை கிழித்தெரிவேன்...
காலமே காலமே புரிந்துகொள்வாய் - நான்
காலனுக்கு காலன் என அறிந்துகொள்வாய்.
ஆசை-தேடல்
ஆபத்திற்கும் பேராபத்திற்கும்
இடைப்பட்டதுதான் ஆசை..!
தோல்விக்கும் வெற்றிக்கும்
இடைப்பட்டதுதான் தேடல்..!
ஆபத்திற்கு துணிந்து ஆசைப்படு..!
தேடலை முடுக்கி வெற்றிபெறு..!
தேடலில்லாத ஆசை ஒரு பேராபத்து..!
ஆசையில்லாத தேடல் ஒரு ஏமாற்றம்..!
இடைப்பட்டதுதான் ஆசை..!
தோல்விக்கும் வெற்றிக்கும்
இடைப்பட்டதுதான் தேடல்..!
ஆபத்திற்கு துணிந்து ஆசைப்படு..!
தேடலை முடுக்கி வெற்றிபெறு..!
தேடலில்லாத ஆசை ஒரு பேராபத்து..!
ஆசையில்லாத தேடல் ஒரு ஏமாற்றம்..!
உலகம்...
வெல்லும் வரை வேடிக்கையாகக்கூட பாராத உலகம்தான்
வென்ற பின்னால் கோவில்கட்டும்...
தகுதி பார்த்து கரம் தட்டும் உலகமில்லை இது
தலை கீரிடம் பார்த்தே கரம் தட்டும் உலகம்...
வென்ற பின்னால் கோவில்கட்டும்...
தகுதி பார்த்து கரம் தட்டும் உலகமில்லை இது
தலை கீரிடம் பார்த்தே கரம் தட்டும் உலகம்...
என்னவள்..
என்னவளே...
ஏவுகனை முத்தத்தை
எட்டி நின்றே தருபவளே...
மீசைமுடி மேலும் வளர
எச்சுமுத்தம் தரவாமா..!
சூரியன விரட்டிவிட்டு
சொர்க்கத்த காண்போமா...
மாலைவெயில் மஞ்சள் அள்ளி
மச்சான் பூசி விடவாமா..!
ஏவுகனை முத்தத்தை
எட்டி நின்றே தருபவளே...
மீசைமுடி மேலும் வளர
எச்சுமுத்தம் தரவாமா..!
சூரியன விரட்டிவிட்டு
சொர்க்கத்த காண்போமா...
மாலைவெயில் மஞ்சள் அள்ளி
மச்சான் பூசி விடவாமா..!
உலக நியதி...
உலகத்தையே வெல்லும் சக்தி உனக்குள்ளே இருந்தாலும்...
நீ வெல்லும் வரை இந்த உலகம் உன்னை வேடிக்கையாகக்கூட பார்க்காது...
அதே நீ வென்றுவிட்டால் கோமாளியாக இருந்தால்கூட கடவுளாகப் பாவிக்கும்..!
என்றும் எழுத்தாணி முனையில்...?
- கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments