ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்(Brief Answers to the Big Questions) நூல்குறிப்பு
நூல் ஆசிரியர் : ஸ்டீபன் ஹாக்கிங்
தமிழில் மொழிபெயர்ப்பாளர் : PSV குமாரசாமி
ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய தொகுப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் அவர் மரணம் எய்திய நேரத்தில் தயாரிப்பு நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய துறையைச் சார்ந்த அறிஞர்களின் உதவியுடன் புத்தகம் நிறைவடைந்தது.
ஸ்டீபன் ஹாக்கிங் இன் மகள் லூசி ஹாக்கிங் அவரால் புத்தகத்தின் சிறப்புரையும்; புத்தகத்தின் அணிந்துரை ஸ்டீபன் ஹாக்கிங்காக நடித்து ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் எடி ரெட்மெயின் அவர்களாலும்; புத்தகத்தின் முன்னுரை நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் பேராசிரியர் கிப் எஸ் தார்ன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது
இப்புத்தகத்தில் -ஆழமான கேள்விகளை நாம் ஏன் கேட்க வேண்டும் எனத் தொடங்கி;
- கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
- பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
- அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
- வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
- ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது?
- காலப்பயணம் சாத்தியம் தானா?
- வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர் பிழைத்து இருப்போமா?
- விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா?
- செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சி விடுமா?
- வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?
ஆகிய பத்து ஆழமான கேள்விகளுக்குள் பல்லாயிரம்சிந்தனைகளை நமக்கு இப்புத்தகத்தின் மூலம் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் வழங்கியிருக்கிறார்.
புத்தகத்திலிருந்து சில துணுக்குகள் கேள்வி பதில்களாக:
- நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது என்ன கனவை கொண்டிருந்தீர்கள்? கனவு நனவானதா?
நான் ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர் ஆக விரும்பினேன் ஆனால் பள்ளிக்கூடத்தில் நான் அவ்வளவு சிறப்பாக படிக்கவில்லை என் வகுப்பில் பாதி மாணவர்கள் எனக்கு மேலே இருந்தனர். என் வேலை அவ்வளவு சுத்தமானதாக இருக்கவில்லை என் கையெழுத்து மோசமாக இருந்தது ஆனால் என் பள்ளியில் எனக்கு நல்ல நண்பர்கள் இருந்தனர். நாங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம் குறிப்பாக பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் அங்கு தான் என்னுடைய கனவு தொடங்கியது அக்கனவு நனவாகியும் உள்ளது.
- பிரபஞ்சத்தின் துவக்கம் மற்றும் முடிவு குறித்து நீங்கள் புரிந்து கொண்டுள்ளவற்றோடு கடவுளின் இருத்தல் எவ்வாறு பொருந்துகிறது? கடவுள் என்ற ஒருவர் இருந்து அவரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டினால் நீங்கள் அவரிடம் என்ன கேட்பீர்கள்?
பிரபஞ்சத்தின் துவக்கம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றா அல்லது அறிவியல் விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட ஒன்றா? என்றுதான் கேள்வி எழுந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தான் உண்மை என்று நான் நம்புகிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியல் விதிகளை கடவுள் என்று அழைத்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் நேரில் சந்தித்து கேள்வி கேட்கக்கூடிய உங்களுடைய தனிப்பட்ட கடவுளாக அவை கண்டிப்பாக இருக்க மாட்டா... ஆனாலும் அப்படி ஒரு கடவுள் இருக்கும் பட்சத்தில் பதினோரு பரிமாணங்களில் பரிணமிக்கும் மிகச் சிக்கலான எம் கோட்பாடு போன்ற எதையாவது அவர் யோசித்து இருக்கிறாரா என்ற கேள்வியைத்தான் நான் அவரிடம் கேட்பேன்.
- பெருவெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது?
எல்லையில்லா திட்டம் என்ற கோட்பாட்டின்படி பிரபஞ்சத்தின் துவக்கத்திற்கு முன்னால் உள்ள காலத்தைப் பற்றிப் பேசுவது அபத்தமானது. தென் துருவத்தின் தெற்கே ஒரு புள்ளியை பற்றி கேட்பதற்கு ஒப்பானது அது. ஏனெனில் அப்புள்ளி வரையறுக்கப்படவில்லை ஒப்பிட்டு கூறுவதற்கு காலமென்னும் யோசனை அங்கு இருக்கவில்லை. காலம் என்ற கருத்துரு பிரபஞ்சத்திற்கு உள்ளாக மட்டுமே உள்ளது.
- பூமிக்கு இருக்கின்ற அச்சுறுத்தல்களிலேயே மிகப் பெரியது எது?
சிறுகோள் மோதலை நான் குறிப்பிடுவேன். ஏனெனில் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு வழியே இல்லை ஆனால் கடந்த முறை அப்படி நடைபெற்ற மிகப்பெரிய முதல் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அது டைனோசர்களை பூண்டோடு அழித்து விட்டது பருவநிலை மாற்றம் தான் உடனடியாக நிகழ்வு இருக்கின்ற மிகப் பெரிய ஆபத்தாகும் கடலின் வெப்பநிலை அதிகரித்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிமலைகள் உருகத் தொடங்கும் அது பிரம்மாண்டமான அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் இவை இரண்டும் சேர்ந்து நம்முடைய பூமி சுக்கிரனை போல தகிக்கும் படி செய்துவிடும். சுக்கிரன் கோளின் வெப்பம் 482 டிகிரி பாரன்ஹீட் அதோடு அங்கு கந்தக மழையும் பொழியும்.
- உலகையே மாற்ற கூடிய எந்த யோசனையை மனிதகுலம் செயல்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அது எளிது மாசுபாடு ஏற்ற ஆற்றலை எல்லையற்ற முறையில் வழங்கக்கூடிய அணுப் பிணைப்பு ஆற்றல் உருவாக்கப்படுவதை பார்க்க நான் விரும்புகிறேன். மற்றொன்று மின் கார்களுக்கு மாறுதல். அணுப்பிணைப்பு மூலம் பெறக்கூடிய ஆற்றல் துளிகூட மாசுபாடு இல்லாத உலகின் வெப்ப அளவை உயர்த்தாத ஒரு ஆற்றலாகும். அதோடு அது என்றென்றும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழமான கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் கருத்துக்களை இப்புத்தகத்தின் மூலம் நமக்கு அளித்துள்ளார்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இப்புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
No comments