CT

அண்மை பதிவுகள்

மனம் என்கிற பூதம்...


tamil short stories


ஒரு நாள் ஒருத்தன் யோகியை தேடிக்கிட்டு போனான்.

“சாமி! நான் உழைச்சி ரொம்ப களைப்படைஞ்சிட்டேன். இருந்தாலும் இன்னமும் என்னுடைய வேலைகளெல்லாம் முடியலே!  பாக்கியிருக்கு.
எல்லா வேலையையும் செஞ்சு முடிக்கிற சக்தி எனக்கு கிடைக்கணும். 

அதுக்கு நீங்கதான் வழி பண்ணனும்!” –ன்னு வேண்டிக்கிட்டான்.

“அந்த சக்தியை உனக்கு நான் கொடுத்துவிடுவேன். இருந்தாலும் அது உனக்குப் பெரிய தொந்தரவா இருக்குமே!” –ன்னார் யோகி.

“இருந்தாலும் பரவாலே சாமி... நீங்க எனக்கு அந்த சக்தியை கொடுங்க!” –ன்னு கேட்டுக்கிட்டான் இவன்.இவனோட தொந்தரவு தாங்க முடியலே...

யோகி பார்த்தார். இவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் பண்ணினார். 

அவன் அந்த மந்திரத்தை கூறி முடிச்சதும் ஒரு பெரிய பூதம் அவன் முன்னாடி வந்து நின்னுது.

“ஐயா... நான் உங்களுக்காக எல்லா வேலையும் செய்யக் காத்துகிட்டிருக்கேன். ஆனா ஒரு நிபந்தனை.நீங்க நாள் பூராவும் எனக்கு இடைவிடாம எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும். 

அப்படி எனக்கு வேலை இல்லாமே போச்சினா...உங்களயே முழுங்கிடுவேன். அவ்வளவுதான்!” –னுது.

அவனும் சரி-ன்னு ஒத்துக்கிட்டான்.



‘சரி வேலை குடு ’-ன்னுது பூதம்.

எனக்கு ஒரு பெரிய மாளிகை வேணும் –ன்னான்.

அடுத்த வினாடி அவன் கண் முன்னாடி ஒரு பெரிய மாளிகை உருவாயிட்டது.

அவன் அடுத்தடுத்து வேலை சொல்ல அனைத்தையும் அந்த நொடியே செய்து முடித்தது.

இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. பிறகு பூதம் இவனை முழுங்கறதுக்கு வந்தது... இவனும் ஓட்டம் எடுத்தான்.

அவன் ஓடிப்போய் அந்த யோகி கால்லே விழுந்தான். அவரும் அதுக்கு ஒரு உபாயம் சொன்னார்.

அவன் அந்த பூதத்துக்கிட்டே மாளிகைக்கு பக்கத்துல ஒரு பெரிய இரும்புத் தூண் உருவாக்க சொன்னான் பிறகு அந்த தூண்ல ஏறி இறங்க சொன்னான். நான் போதும்-ன்னு சொல்ற வரைக்கும் இதயே பண்ணு-ன்னு சொல்லிட்டு அவர் தேவையான பொது மட்டும் அந்த பூதத்த பயன்படுத்திகிட்டார்.

இதிலிருந்து சொல்ல வருவது என்னவென்றால்..நம்ம சிந்தனையும் பூதம் மாதிரிதான் நம்ம அத சரியா செயல்படுத்தனும் இல்லைன்னா தவறான சூழலில் சிக்கித்தவிக்கும் படி ஆகிவிடும்.


ஒரு குடும்பஸ்தர் ரொம்ப பெருமையா சொன்னார்:

“நான் எப்பவும் சும்மா இருக்கமாட்டேன் ஐயா.. எந்த நேரமும் என் மனைவி முன்னாடி நின்று ஏதாவது பேசிக்கிட்டே தான் இருப்பேன்!” –னார்.

“நிறுத்தவே மாட்டீங்களா?” –ன்னேன்.

“மாட்டேன்!” –னார்.

“ஏன்?” னு கேட்டேன்.

“நான் நிறுத்தினா அவ பேச ஆரம்பிச்சிடுவாளே! அதானலேதான்!”- அப்படின்னார்.        


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.




No comments