வித்தியாசமான மனிதர்...
வித்தியாசமான மனிதர்களால் நிரம்பியது இந்த உலகம். இவ்வுலகில், ஒருவரைப் பின்பற்றி வாழ முடியும் ஆனால் ஒருவரின் நகலாக வாழ முடியாது. என்பது நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.
பெர்னாட்ஷா ஒரு தத்துவமேதை சில தத்துவார்த்தமான பதில்களை அவரை விட
வேறு யாரும் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அவரின் விமர்சனத்திற்காக பலரும்
காத்துக்கிடந்த காலம் அது. அவரையே பலரும் விமர்சித்த காலமும் அதுதான்.
பெர்னாட்ஷாவிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்ததாக கூறுவர்.
நாமெல்லாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது வீட்டில் உள்ள
விளக்கை எல்லாம் அனைத்து விட்டு சன்னல், கதவுகளை பூட்டி விடுவோம். முடிந்தால் சரியாக பூட்டியிருகிறதா என்று பூட்டை
இழுத்துப் பார்த்து விடுவோம்.
பெர்னாட்ஷாவிடம் இருந்த வித்தியாசமான பழக்கம் இதுதான். அவர் வீட்டை
விட்டு வெளியே செல்லும் போது நாம் செய்வதிற்கு மாறாக சன்னல், கதவுகளை திறந்து
போட்டுவிட்டுச் சென்றுவிடுவாராம். அவர் வீட்டிற்குள் இருந்தால் அத்தனை கதவுகளையும்
உட்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு யாராவது வந்தால்தான்
கதவை திறப்பாராம். வித்தியாசமான பழக்கம் தானே இது.
ஒரு முறை செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவிடம்“ஐயா நீங்கள் எப்போதும் வீட்டை
விட்டு வெளியே செல்லும் போது வீட்டை பூட்டாமலும், வீட்டில்
இருக்கும் போது உள்ளுக்குள்ளே பூட்டி விடுகிறீர்களே ஏன்?” என்று
கேட்டவுடன்...
“நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஏன்
வீட்டை பூட்டுகிறீர்கள்?” அதற்கு செய்தியாளரோ “பூட்டவில்லை எனில் வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை யாரவது
திருடிச்சென்று விடுவார்கள்.” என்றார்.
பெர்னாட்ஷாவோ சிரித்துக் கொண்டே “என்னை விட மதிப்பு மிக்க உயர்ந்த பொருள்
என் வீட்டில் ஏதுமில்லை. அதனால்தான் நான்
வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டுவதில்லை. என்னை திருடிச் சென்றுவிடக்கூடாது
என்பதற்காக வீட்டில் உள்ள போது பூட்டிக்கொள்கிறேன்” என்றார்.
திகைத்து நின்றது செய்தியாளர்கள் மட்டுமல்ல நாமும் தானே!.
உங்களை விட மதிப்புமிக்கவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணருங்கள்.
ஒரு செயலைச் செய்ய முடியாது என்பவர் அச்செயலை செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.
தன்னைத் தானே திருத்திக் கொள்பவன் தான் உலகிலேயே சிறந்த சீர்திருத்தவாதி.
உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும் கோபத்தில் உள்ள காதலையும் மௌனத்தில் உள்ள காரணத்தையும் யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களே உங்கள் அன்புக்கு உரிமையுடையவர்.
அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் வரைமுறை இல்லை. இரண்டும் எல்லையற்றவை.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
இன்பமும் துன்பமும் பணத்தை பொறுத்தவை அல்ல. மனதை சார்ந்தவை. பணமானது பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
அறிவு என்பது நதியைப் போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.
தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற மொழியில் திறன் பெற முடியாது.
அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
“உங்களைத் தவிர வேறு யாராலும்
உங்களைப் போல வாழ்ந்திட முடியாது.”
“உங்களை யாரோடும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்...
உங்கள் படைப்பின் நோக்கம் வேறாகவும்
இருக்கலாம்.”
No comments