எண்ணத் துணுக்குகள் || lines of vignesh
உன்னைக் கண்ட தருணம் முதல்
உன்னோடு பேச எண்ணியதெல்லாம் வரைவு பதிவுகளாய் மின்னஞ்சலில்...
சிப்பிக்குள் முத்து போல
இமைகளுக்குள் கண்கள்...
தினக்குறிப்புப்புத்தகத்தில்
உன் எழுத்துகள்...
எனக்குள் நீ..!
தேடல் என்னும் வாகனத்தை நாம் செலுத்தாவிடில் வாழ்க்கைப் பயணம் நகராது.
உன்னை காணாமல் இருந்திருந்தால் நினைவில் இல்லாமல்
இருந்திருப்பாய். ஆனால், உன்னை கண்டதால் நினைவும் கனவும் உன்னோடு உலவுகிறது...
நில்லாமல் ஓடும் அவசர உலகில்...
நிலை அறியா மாந்தராய் மாண்டு போகுமோ தம் தலைமுறை..!
எண்ணம் என்ற ஏட்டில் எழுத எண்ணிலடங்கா எண்ணங்கள்...
இருந்தும் ஏனோ எழுத மறுக்கிறது என் எழுத்தாணி..?
என்னவள் மனதில் எண்ணுகிறவற்றை எண்ணியபடியே
காத்திருப்புடன் உன்னவன் :-)
மனதின் எண்ணங்கள் வெளிப்படும் காலமே...
மனிதனின் நிகழ்காலம் துவங்குகிறது...!
நித்திரையில் சொப்பனம் காணும் என் கண்ணே!
நீ நினைக்கையில் வந்து நிற்பேன் உன் விழியின் முன்னே!
விழி வழி நிலவினை காண...!
நிலவொளி வழியே விழிக்கு செய்தி அனுப்பியது நிலவு...!!
என்னை காணும் உன் விழிக்கு ஓய்வு கொடு என்று...!!!
என் இரவிடம் இரவல் பெற்றுக்கொண்டேன் கனவுகளை...
-விக்னேஷ்
அழகிய வரிகள்
ReplyDelete